Shopify Catalog

உலகின் தயாரிப்புகள் அனைத்தும், ஒரே பட்டியலில்

தற்போதைய விலை, சரக்கு இருப்பு மற்றும் செக்அவுட் இணைப்புகளுடன், லட்சக்கணக்கான பிராண்டுகளின் பில்லியன் கணக்கான தயாரிப்புகளை ஒரே அழைப்பில் தேடுங்கள்.

12 தயாரிப்புகள்

முயன்று பாருங்கள்

ஒரு API, மூன்று அழைப்புகள்

பல மில்லியன் வணிகர்களைத் தேடுங்கள், எந்தவொரு தயாரிப்பையும் முழுமையாகக் காணுங்கள், வேறு எங்கும் நீங்கள் கண்டறிந்த தயாரிப்புகளுக்கான தற்போதைய விலைகளைப் பெறுங்கள்.

ஒரு தயாரிப்பை விற்கும் ஒவ்வொருவரும்,
ஒரே ID-யின் கீழ்

Catalog ஸ்டோர்கள் முழுவதும் உள்ள ஒவ்வொரு தயாரிப்பையும் ஒன்றிணைக்கிறது,
அதன் விருப்பத்தேர்வுகளைத் தரப்படுத்துகிறது மற்றும் அதன் பண்புக்கூறுகளை மேம்படுத்துகிறது.
  • Matilda Chair – Natural OakVNTI
  • MATILDA CHAIR solid oak, naturalKiln & Co.
  • Oak dining chair — Matilda, naturalHalden Home
நேச்சுரல் ஓக் நிறத்தில் உள்ள Matilda நாற்காலிMatilda Chairgid://shopify/p/exampleநாற்காலி · நேச்சுரல் ஓக்
  • VNTIஇருப்பில் உள்ளது$200.00
  • Kiln & Co.இருப்பில் உள்ளது$215.00
  • Halden Homeவிற்றுத் தீர்ந்துவிட்டது$185.00

தனிப்பயனாக்கப்பட்ட தேடல்

Shop மூலம் உள்நுழையும் வாங்குபவர்களுக்கு, அவர்களின் விருப்பத்தேர்வுகள் மற்றும் ஷாப்பிங் வரலாறு அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட முடிவுகள்
கிடைக்கின்றன
  1. Bram லவுஞ்ச் நாற்காலி$1,180.00Teaglen Studio
  2. சிறந்த பொருத்தம்
    Otis லவுஞ்சர்$640.00Olmsby Home
  3. Wren சுழல் நாற்காலி$890.00Osmarra
  4. சிறந்த பொருத்தம்
    Matilda நாற்காலி$200.00VNTI
  5. Juno கிளப் நாற்காலி$1,450.00Hessaly
  6. Rhea ஆர்ம்சேர்$1,320.00Fenwray Goods
தன்னிடம் உள்ள தரவை Shop பயன்படுத்தியது: வெளிர் ஓக் நடுநிலை நிறங்கள் $1,000-க்குக் கீழ்

ஒவ்வொரு ஆர்டரிலும் சம்பாதியுங்கள்

உங்கள் செயலி மூலம் வாங்குபவர்கள் பொருட்களை வாங்கும்போது கமிஷன் பெறுங்கள். Promoted Placements என்பது முன்கூட்டிய அணுகலில் (early access) உள்ளது.
Matilda ChairVNTI · ஆர்டர் செய்யப்பட்டது$200.00
பெறப்பட்ட கமிஷன்+$20.00

தொடங்குங்கள்

உங்கள் முதல் அழைப்பை மேற்கொள்ளுங்கள்

விசை ஏதும் தேவையில்லை. Shop CLI-ஐ நிறுவி, பிறகு உங்கள் டெர்மினலில் shop search என்பதை இயக்கவும்.

Catalog API விசையை உருவாக்குங்கள்

உங்கள் சொந்தச் செயலியிலிருந்து https://catalog.shopify.com/api/ucp/mcp முகவரிக்குக் கோரிக்கைகளை அனுப்ப, Dev Dashboard-இல் “ஏஜென்ட்கள்” பகுதியைத் திறந்து API விசையை உருவாக்கவும். நேரடிப் பயன்பாட்டுக்குத் தேவையான அதிக வீத வரம்புகளை இந்த விசை வழங்குகிறது.

உங்கள் அழைப்புகளை அங்கீகரியுங்கள்

அணுகல் டோக்கனைப் பெற உங்கள் விசையைப் பயன்படுத்துங்கள், பிறகு அதை ஒவ்வொரு அழைப்புடனும் அனுப்புங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இதுவும் shop.dev என்பதும் ஒன்றா?

இல்லை, ஆனால் அவை ஒன்றாகச் செயல்படுகின்றன. Catalog என்பது தயாரிப்புத் தேடல் பட்டியலாகும், மேலும் shop.dev தளத்திலுள்ள தேடல் இதில்தான் இயங்குகிறது. shop.dev-ஆனது 'Shop மூலம் உள்நுழைதல்', Shop Pay மூலம் செக்அவுட் செய்தல் மற்றும் ஆர்டர் கண்காணிப்பு ஆகியவற்றைச் சேர்க்கிறது. உங்களுக்குத் தேடல் மட்டும் தேவையென்றால் இங்கிருந்து தொடங்குங்கள் அல்லது உங்கள் ஏஜெண்ட் செக்அவுட் செய்யவேண்டுமானால் shop.dev தளத்தில் தொடங்குங்கள்.

எனக்கு API விசை தேவையா?

முயன்று பார்க்கத் தேவையில்லை. குறைவான வீத வரம்புகளில் விசையின்றி தேடல் இயங்கும். Dev Dashboard இலிருந்து பெறப்படும் Catalog API விசையானது இந்த வரம்புகளை அதிகப்படுத்தும், மேலும் புரொடக்‌ஷனுக்கு உங்களுக்கு அது கட்டாயம் தேவை.

இதில் எந்தெந்தத் தயாரிப்புகள் உள்ளன?

Shopify-இல் மில்லியன் கணக்கான வணிகர்கள் வழங்கும் 1 பில்லியனுக்கும் அதிகமான தயாரிப்புகள் உள்ளன. இதன் பீட்டா பதிப்பில், Shopify-இல் விற்பனை செய்யாத பிராண்டுகளின் தயாரிப்புகளும் அட்டவணையில் அடங்கும். இவை இயல்பாகவே முடக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவில் உள்ள வாங்குபவர்களுக்கு மட்டுமே காட்டப்படும், மேலும் வாங்குவதற்கு பிராண்டின் இணையதளத்திற்கு இணைக்கப்படும். இங்கே மேலும் அறிக (புதிய தாவலில் திறக்கப்படும்).

இந்தத் தரவு எந்தளவுக்குச் சமீபத்தியது?

Shopify வியாபாரிகளிடமிருந்து வரும் தயாரிப்புகள், அந்த ஸ்டோரின் தற்போதைய விலை மற்றும் சரக்கு இருப்பைக் கொண்டிருக்கும். Shopify-இல் விற்காத பிராண்டுகளின் தயாரிப்புகள் அவர்களின் இணையதளங்களிலிருந்து பெறப்படுவதால், விலை மற்றும் கிடைக்கும் தன்மை ஆகியவை தளத்திலிருந்து மாறுபடலாம்.

முடிவுகளின் நகலை நான் வைத்திருக்கலாமா?

இல்லை. முடிவுகளை கேச் (cache) செய்யவோ வணிகரின் படங்களை ரீ-ஹோஸ்ட் செய்யவோ கூடாது. உங்களுக்குத் தேவைப்படும்போது புதிய தரவைக் கோரி, முடிவில் கிடைக்கும் URL-களிலிருந்து படங்களைக் காட்டுங்கள். சோதனைகளுக்கு, கற்பனையான தரவைப் பயன்படுத்துங்கள்.

மீதமுள்ள ஷாப்பிங் அனுபவத்தை உருவாக்குகிறீர்களா?

shop.dev-இல் பிற கருவித்தொகுப்புகளும் உள்ளன: வாங்குபவர் உள்நுழைவு,
Shop Pay மூலம் செக்அவுட் மற்றும் ஆர்டர்கள்.