சர்வதேச விற்பனை
உலகெங்கும் வளருங்கள்
Shopify-இன் உலகளாவிய வர்த்தகத் தளத்தில் அதிக பிராந்தியங்களில் உள்ள பல வாங்குபவர்களுக்கு விற்பனை செய்யுங்கள்.
Shopify ஸ்டோர் இல்லையா? இலவசமாகத் தொடங்குங்கள்







*EY-ஆல் Shopify-க்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 567 பிராண்டுகளின் மாதிரியை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச விற்பனைத் தரவு.

நாங்கள் ஒரு புதிய சந்தையில் அறிமுகமாகும்போது, நாணய மாற்றம் செய்வதுடன் தயாரிப்பு விலைகளைப் புதுப்பிப்பதை Shopify-இன் சர்வதேச விற்பனைக் கருவிகள் எங்களுக்கு மிகவும் எளிதாக்கியுள்ளன.
சந்தை என்பது நாடு, பிராந்தியம் அல்லது வாடிக்கையாளர் வகையின் அடிப்படையில் நீங்கள் வரையறுக்கும் வாடிக்கையாளர்களின் குழுவாகும். Shopify Markets மூலம், ரீடெய்ல் மற்றும் B2B வாங்குபவர்கள் என இருவருக்குமான சந்தைகளை உங்களால் உருவாக்க முடியும். மேலும், உள்ளூர் நாணயங்கள், விலை நிர்ணயம் ஆகியவற்றை அமைத்து, எந்தெந்தத் தயாரிப்புகள் கிடைக்கும் என்பதைத் தேர்வுசெய்து, ஒவ்வொரு சந்தைக்கும் ஏற்ப உங்களின் ஸ்டோர்ஃபிரண்ட் அனுபவத்தை மாற்றியமைக்கலாம். இந்த அமைப்புகள் அனைத்தும் உங்களால் உள்ளமைக்கப்பட்டு, நிர்வகிக்கப்படும்.
சந்தைத் தனிப்பயனாக்கம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் தகுதியுள்ள பிராந்தியத்தில் இருந்து, நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்கிறீர்கள் எனில், உடனடியாகத் தொடங்குவதற்கு Shopify Managed Markets-ஐப் பயன்படுத்துவது மிகச் சிறந்த வழியாகும். இது வெளிநாட்டு வரிகள், இறக்குமதிக் கட்டணங்களைக் கையாளும் 'மெர்ச்சண்ட்-ஆஃப்-ரெக்கார்ட்' சேவையின் மூலம் எல்லை தாண்டி விற்பனை செய்வதில் உள்ள பல்வேறு வேலைகள் மற்றும் அபாயங்களைத் தானியக்கமாக்குகிறது. அத்துடன் தகுதியான சார்ஜ்பேக்குகளுக்கான பாதுகாப்பை அளித்து, சந்தைகள் முழுவதும் உங்கள் லாப வரம்புகளைச் சீராக வைத்திருக்க உதவும் தானியங்கு விலை மாற்றங்களையும் வழங்குகிறது.
தகுதியுள்ள பிராந்தியங்களுக்கு வெளியே உள்ள வணிகர்கள், எந்தவொரு திட்டத்திலும் சர்வதேச அளவில் விற்பனை செய்ய Shopify Markets அனுமதிக்கிறது. உள்ளூர் நாணயங்கள், சந்தை சார்ந்த விலை நிர்ணயம், மொழிபெயர்ப்புகள், சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை நீங்களே உள்ளமைக்கலாம்.