Shopify Collective

உங்களுக்குப் பிடித்த பிராண்டுகளுடன் இணைந்து பெருமளவில் விற்பனை செய்யுங்கள்

தயாரிப்பு ஒத்துழைப்புகள், பிரத்யேக சந்தைகள் மற்றும் இவை இரண்டுக்கும் இடைப்பட்ட அனைத்தையும் செயல்படுத்துவதற்காக உங்களுக்குப் பிடித்த பிராண்டுகளுடன் இணையுங்கள்—Shopify-க்கு உள்ளேயே தடையின்றி இதைப் பெறுங்கள்.

Shopify-க்குப் புதியவரா? 3 நாள் இலவச சோதனையுடன் தொடங்குங்கள்

  • Fear of God
  • Beast
  • True Classic
  • Humanrace
  • Newton
  • Branch
  • Porter Road
  • Bala
  • Kyte Baby
  • Blendjet
  • Kitsch

நீங்கள் எவ்வாறு விற்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யுங்கள்

ஒரு சில்லறை விற்பனையாளராகவோ சப்ளையராகவோ இருங்கள் அல்லது இரண்டு செயலிகளையும் ஒருங்கே பயன்படுத்துங்கள்.

சில்லறை விற்பனையாளர்களுக்கானது

சரக்கு இருப்பு இல்லாமல் புதிய தயாரிப்புகளை விற்கலாம்

சரக்கு இருப்பைப் பராமரிக்காமல், முன்னணி Shopify பிராண்டுகளிலிருந்து தயாரிப்புகளை இறக்குமதி செய்வதன் மூலம் லாபத்தை அதிகரியுங்கள்—நீங்கள் விற்கும்போது மட்டும் பேமெண்ட் செலுத்துங்கள்.

பச்சை நிறப் பின்னணியில் சுயவிவரப் படத்தைக் காட்டும் மெய்நிகர் சரக்கு இருப்பின் இடைமுகம். இதில்: தானியங்கு பேமெண்ட்கள் இயக்கப்பட்டுள்ளன, 187/400 இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புகள் மற்றும் $53,020.00 மொத்த விற்பனை ஆகிய புள்ளிவிவரங்கள் காட்டப்பட்டுள்ளன. 'ஸ்டோரில் இறக்குமதி செய்' பொத்தான் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது.

பிராண்டுகளுடன் இணையுங்கள்

Shopify-இன் உலகத்தரம் வாய்ந்த வலையமைப்பிலிருந்து சப்ளையர்களைக் கண்டறியுங்கள் அல்லது நம்பகமான கூட்டாளர்களை விரைவாகப் பழக்கப்படுத்தி, கூட்டாக விற்பனையைத் தொடங்குங்கள்.

புதிய தயாரிப்புகளைப் பரிசோதியுங்கள்

சப்ளையர் கேட்டலாக்குகளிலிருந்து சில வினாடிகளில் தயாரிப்புகளைத் தேர்வுசெய்து, ஆபத்தான முதலீடுகள் இன்றி வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை வழங்குங்கள்.

நீங்கள் விற்கலாம், அவர்கள் ஷிப் செய்வார்கள்

செக்அவுட்டின்போது, Collective ஆனது ஆர்டர்களை நேரடியாக உங்கள் சப்ளையர்களுக்கு அனுப்பி, அவற்றை நிறைவேற்றி வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக ஷிப் செய்யும். ஸ்டாக் எதையும் கையாள வேண்டியதில்லை, எந்தவொரு சிரமமும் இல்லை.

ஒவ்வொரு ஆர்டரிலும் சம்பாதியுங்கள்

உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து மையப்படுத்தப்பட்ட முறையில் ஆர்டர்களைத் தடமறிந்து, நீங்கள் விற்ற தயாரிப்புகளைச் சப்ளையர்கள் ஷிப் செய்த பிறகு மட்டுமே அவர்களுக்கான பேமெண்ட்டைச் செலுத்துங்கள்.
சில்லறை விற்பனையாளர் செயலியைப் பெறுங்கள்

கேட்டலாக்கில் என்ன இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள ஆர்வமா?

ஒரே கிளிக்கில் உங்கள் ஸ்டோரில் இறக்குமதி செய்து, நீங்கள் விற்கக்கூடிய Collective தயாரிப்புகளின் மாதிரிக்காட்சியைப் பெறுங்கள்.
தயாரிப்புகளை உலாவுக

சப்ளையர்களுக்கானது

சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யலாம்

முன்னணி Shopify ஸ்டோர்களில் உங்களின் தயாரிப்புகளை விற்பதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை அடைந்து லாபத்தை அதிகரியுங்கள்.

சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பதற்கான அழைப்பிதழ்களைக் காட்டும் இடைமுகம். Zen Sana Boutique, Modavia Apparel மற்றும் Threadscape ஆகியவற்றின் கார்டுகள் காட்டப்பட்டுள்ளன, Threadscape-ஐச் சேர்ந்த Katie உங்களின் தயாரிப்புகளை விற்க விரும்புவதான செய்தியும் 'அழைப்பை ஏற்குமாறு' கேட்கும் பொத்தானும் உள்ளது.

விரைவாக இணையுங்கள்

உங்களுக்குப் பிடித்த சில்லறை விற்பனையாளர்களுடன் இணையுங்கள் அல்லது உங்களின் தயாரிப்புகளை விற்க விரும்பும் Collective-இன் நம்பகமான வலையமைப்பிலுள்ள ஸ்டோர்களிலிருந்து வரும் அழைப்பிதழ்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளைப் பகிருங்கள்

குறிப்பிட்ட சில்லறை விற்பனையாளர்களுக்குத் தயாரிப்புகளை ஒதுக்க விலைப்பட்டியல்களைப் பயன்படுத்தி, உங்கள் கட்டுப்பாட்டிலுள்ள லாப வரம்புகளுடன் முழுமையான வாங்கும் அனுபவத்தை வழங்குங்கள்.

அவர்கள் விற்பார்கள், நீங்கள் ஷிப் செய்யலாம்

நிறைவேற்றுவதற்குத் தயாராக வாடிக்கையாளர் ஆர்டர்கள் சில்லறை விற்பனையாளரின் செக்அவுட்டிலிருந்து உங்கள் ஸ்டோருக்குத் தடையின்றி வந்தடையும். நீங்கள் ஷிப் செய்யும்போது, பேமெண்ட் தானாகவே செலுத்தப்படும்.

நிகர லாபத்தை அதிகரியுங்கள்

வாடிக்கையாளர் கையகப்படுத்தல் செலவுகளைக் குறைக்கும் அதே வேளையில், புதிய இடங்களில் விற்று, பிராண்ட் விழிப்புணர்வை உருவாக்கி அதிக லாபத்தைப் பெறுங்கள்.
சப்ளையர் செயலியைப் பெறுங்கள்

நீங்களும் நாங்களும் இணைந்தால், வெற்றி நிச்சயம்

விற்பனையை அதிகரிக்கவும் AOV-ஐ உயர்த்தவும் புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும் Shopify Collective-இல் பிராண்டுகள் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன என்பதைக் கண்டறியுங்கள்.

பிளக் அண்ட் பிளே தானியக்கமாக்கல்கள்

கடினமான பணிகளுக்கு விடைபெற்று, எளிமையான பிராண்டு கூட்டாண்மைகளை வரவேற்கலாம்.

மல்டி-பிராண்டு செக்அவுட்

ஒரு பிராண்டோ அல்லது 10 பிராண்டுகளோ வாடிக்கையாளர்களின் கார்ட்டுகளில் எது இருந்தாலும் அவர்கள் ஒருமுறை செக்அவுட் செய்யும்போது, ஆர்டர்கள் நிறைவேற்றப்பட நேரடியாகச் சப்ளையர்களிடம் சென்றடையும்.

கணக்கிடப்பட்ட ஷிப்பிங்

எடை மற்றும் வாடிக்கையாளர் இருப்பிடத்தின் அடிப்படையில் செக்அவுட்டின்போது பெறப்பட்ட சப்ளையர் கட்டணங்களுடன் ஒவ்வொரு முறையும் துல்லியமான ஷிப்பிங் செலவுகள் காட்டப்படும்.

நேரடிப் பேஅவுட்கள்

வருவாயைப் பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தங்கள் உள்ளமைக்கப்பட்டுள்ளதால், ஆர்டர் நிறைவேற்றப்பட்டவுடன் இரண்டு தரப்பினரும் உடனடியாக நிதியைப் பெறுவார்கள்.

தடையற்ற ரிட்டர்ன்கள்

3-ஆம் தரப்புச் செயலியைப் பயன்படுத்தினாலும் சரி அல்லது Shopify நிர்வாகியைப் பயன்படுத்தினாலும் சரி, ரிட்டர்ன்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் செயலாக்கத்திற்காகச் சில்லறை விற்பனையாளர்கள் தெளிவான விதிகளை அமைக்கிறார்கள்.

நிகழ்நேரச் சரக்கு இருப்பு

எந்தவொரு புதிய புதுப்பிப்புகளுடனும் தயாரிப்புகள் மிக விரைவாக ஒத்திசைக்கப்படும், இதனால் ஃப்ளாஷ் விற்பனையின்போதும் அளவுக்கு மீறி விற்பனை செய்யும் அபாயம் ஏதுமிருக்காது.

கட்டுப்படுத்தப்பட்ட இறக்குமதி

தயாரிப்பு விவரங்கள் மற்றும் பலவற்றுக்கான சில்லறை விற்பனையாளர் கொள்கைகள் மூலம் அனைத்து ஒத்திசைவுகளும் பரவலாக நிர்வகிக்கப்படும்.

இலவசமாகத் தொடங்குங்கள்

தகுதியுள்ள Shopify ஸ்டோர்கள்-க்கு Shopify Collective-ஐப் பயன்படுத்துவது முற்றிலும் இலவசம்.

நான் ஒரு சில்லறை விற்பனையாளர்

தரமான Shopify பிராண்டுகளிலிருந்து தயாரிப்புகளை இறக்குமதி செய்து விற்கலாம், இதில் எந்தச் சரக்கு இருப்புச் செலவுகளோ அல்லது பொறுப்புகளோ இல்லை—அதிக லாபம் மட்டுமே.

நான் ஒரு சப்ளையர்

சில்லறை விற்பனையாளர்கள் உங்களின் தயாரிப்புகளைத் தங்களது ஸ்டோர்ஃபிரண்ட்கள் மூலம் விற்பனை செய்ய ஒப்புதல் அளிப்பதன் மூலம் உங்கள் ரீச்சையும் விற்பனையையும் அதிகரியுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்