மோசடிக்கான தீர்வுகள்
மோசடியை எதிர்த்துப் போராடுவது மட்டுமின்றி, அதைத் தடுத்திடுங்கள்
Shopify-இலேயே மோசடியைக் கணித்து, கண்டறிந்து நிர்வகியுங்கள். மேம்பட்ட இயந்திரக் கற்றல், தனிப்பயன் விதிகள் மற்றும் பல உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்புக் கருவிகளை இலவசமாகப் பெறுங்கள்.
Shopify ஸ்டோர் இல்லையா? இலவச சோதனையைத் தொடங்குங்கள்.

புதிய, ஆற்றல்வாய்ந்த கருவிகளைக் கொண்டு மோசடியிலிருந்து உங்கள் பிசினஸைப் பாதுகாத்திடுங்கள்
2023-இல், ஈகாமர்ஸ் மோசடியால் உலகெங்கிலும் உள்ள வணிகர்களுக்கு $48 பில்லியன் USD-க்கு மேல் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.¹ Shopify-இன் இலவசப் பாதுகாப்புக் கருவிகள் மூலம் மோசடியால் பணம் இழப்பதைத் தடுத்திடுங்கள்.
செயல்பாடுகளை நெறிப்படுத்துங்கள்
மோசடியைக் கண்டறியவும், தடுக்கவும், தகராறு நிர்வாகம் செய்யவும் தேவையான அனைத்துக் கருவிகளையும் Shopify-இலேயே அணுகுங்கள்.
வருவாயை அதிகப்படுத்துங்கள்
சிறந்த மோசடித் தடுப்புக் கருவிகளைப் பயன்படுத்தி அதிக ஆர்டர்களை நம்பிக்கையுடன் அனுமதியுங்கள்.
மேனுவல் வேலைகளைக் குறைத்திடுங்கள்
அதிக ஆபத்துள்ள ஆர்டர்களை எளிதாக நிர்வகிக்க, மோசடிப் பணிப்பாய்வுகளை ஆட்டோமேட் செய்திடுங்கள்.
எங்கள் வலையமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
எங்கள் வலையமைப்பிலிருந்து பில்லியன் கணக்கான தரவுப் புள்ளிகளில் பயிற்சி பெற்ற எங்களின் மேம்பட்ட இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
10B+
இயந்திரக் கற்றல் மூலம் பயிற்சி பெற்ற பரிவர்த்தனைகள்
99.7%
Shopify ஆர்டர்களின் ஏற்பு விகிதம்²
$745M+
கொடியிடப்பட்ட மோசடிச் செயல்பாடுகள்³
தடுப்புமுறை
மோசடியை முன்கூட்டியே தடுத்திடுங்கள்
மோசடிக்கு ஆளாகும் முன் உங்கள் பிசினஸைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் - இழந்த விற்பனையை மீட்பதை விட இது மிகவும் எளிதானது.

நெகிழ்வான விதிகள்
Shopify Flow மூலம் பிரத்தியேக விதிகளை அமைத்து எந்தெந்த ஆர்டர்களை ரத்துசெய்ய வேண்டும், அனுமதிக்க வேண்டும் அல்லது மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துங்கள்.
கூடுதல் பாதுகாப்பு அடுக்கு
3D Secure மூலம் பேமெண்ட்டுகளைத் தானாகவே அங்கீகரித்து, மோசடியான சார்ஜ்பேக்குகளைத் தவிர்த்திடுங்கள்.
குறைவான மோசடிப் பரிவர்த்தனைகள்
செக்அவுட்டின்போது ஒருங்கிணைந்த கார்டு சோதனைப் பாதுகாப்பு மூலம் கிரெடிட் கார்டு மோசடியைத் தடுத்திடுங்கள்.
கண்டறிதல்
நிஜமான வாங்குபவர்களைத் தடுக்காதீர்கள், மோசடி செய்பவர்களைத் தடுத்திடுங்கள்

தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுங்கள்
முக்கிய நுண்ணறிவுகள் மற்றும் ஆர்டர் ஆபத்து நிலைகளின் அடிப்படையில் எதை நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, மோசடி பகுப்பாய்வைப் பயன்படுத்துங்கள்.
மோசடியான வாங்குபவர்களை அடையாளம் காணுங்கள்
ப்ராக்ஸி கண்டறிதல் மூலம் அதிக ஆபத்துள்ள வாங்குபவர்களைத் தானாகவே கொடியிடுங்கள்.
கணக்கு கையகப்படுத்தல்களைக் கட்டுப்படுத்துங்கள்
உங்கள் ஸ்டோரில் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் அல்லது அறியப்பட்ட தாக்குதல்கள் நிகழும்போது அறிவிப்பைப் பெறுங்கள்.
நிர்வாகம்
விற்பனையில் உங்கள் கவனத்தை வைத்திருங்கள்
மோசடிகளைத் தடுக்க குறைந்த நேரத்தையும் பணத்தையும் செலவழித்து, உங்கள் பிசினஸை வளர்ப்பதற்கு முதலிடம் கொடுங்கள்.
அதிக ஒப்புதல் விகிதங்கள்
ஒருங்கிணைந்த அங்கீகார மேம்படுத்தல் மூலம் உங்கள் வருவாயையும் ஒப்புதல் விகிதங்களையும் அதிகப்படுத்துங்கள்.
ஆட்டோமேட் செய்யப்பட்ட தகராறுத் தீர்வுகள்
நீங்கள் உங்கள் பிசினஸை நடத்துவதில் கவனம் செலுத்தும் வேளையில், தகராறு நிர்வாகம் ஆட்டோபைலட்டில் இயங்கட்டும்.
மேம்பட்ட கட்டுப்பாடுகள்
மோசடி செய்பவர்களைக் கண்காணிக்க, அனுமதிக்கப்பட்ட மற்றும் தடுக்கப்பட்ட பயனர்களின் பிரத்தியேகப் பட்டியலை உருவாக்குங்கள்.

லட்சக்கணக்கான பிராண்டுகளை மோசடியிலிருந்து Shopify ஏற்கனவே பாதுகாத்து வருகிறது
"Shopify Payments-க்கு மாறியதிலிருந்து, எங்களின் 99.9% Shopify ஆர்டர்களுக்கு ஒப்புதல் அளிக்கிறோம், மேலும் மோசடி தொடர்பான எந்தச் சிக்கலும் எழவில்லை."

Shopify Payments மூலம் இலவச மோசடித் தடுப்புக் கருவிகளைத் திறந்திடுங்கள்
Shopify Payments-ஐச் செயல்படுத்துவதன் மூலம் இலவசப் பாதுகாப்புக் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம்
உதவி மையம்
Shopify-இன் புதிய மோசடிப் பாதுகாப்புக் கருவிகளைப் பற்றி மேலும் அறியவும்.
வலைப்பதிவு
Shopify-இன் தொழில்நுட்பம் லட்சக்கணக்கான வணிகர்களை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆதரவு
எங்களின் பிரத்யேக ஆதரவுக் குழுவைத் தொடர்புகொள்ளுங்கள்.
² Shopify ஆர்டர்களுக்கான ஏற்பு விகிதம் 99.7% ஆகும், ஆனால் இது ஸ்டோருக்கு ஸ்டோர் மாறுபடலாம். உங்களுக்குப் பதிலாக Shopify ஆர்டர்களை நிராகரிக்காது, எந்தெந்த ஆர்டர்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது உங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
³ வணிகர் ஸ்டோர்களில் நிகழ்ந்த மோசடியான பரிவர்த்தனை முயற்சிகளின் எண்ணிக்கை (USD).